படப்பிடிப்பிற்கான நெறிமுறைகள்: மத்திய அரசு!

Published:

shooting-spot

உலகம் முழுவதும் பரவிய கொரேனா தொற்று காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதேபோல் தியேட்டர்களும் மூடப்பட்டதால் பிரபல நடிகர்களின் படங்களும் ஓஓடி தளத்தில் வெளியாகி வருகிறது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள்:

படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
6 அடி சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும்
படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது
மைக் போன்ற பொருட்களை பயன்படுத்திய பிறகு நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

உடைகள், விக், ஒப்பனை பொருட்களை பகிர்ந்து கொள்வதை முடிந்து அளவிற்கு தவிர்க்க வேண்டும்.

கேமரா முன் நிற்கும்போது தவிர மற்ற நேரங்களில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்

உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம்.

ஒப்பனை கலைஞர்கள் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும்.

வெளிப்புற படப்பிடிப்பின்போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

Related articles

Recent articles

spot_img