இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை வழிமறித்து 5 பேர் பாலியல் வன்கொடுமை!

Published:

vankodumai

பிர்பம் மாவட்டத்தில் 5 பேர் சேர்ந்து பழங்குடியின பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டம் போர்பந்த் என்ற பகுதியில் இருக்கும் பழுங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்து விட்ட நிலையில் அவர் தற்போது தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 18ஆம் தேதி மாலை அவர் அந்தபகுதியில் ஒருவரை சந்திப்பதற்காகச் சென்றார். பின்னர், பைக்கில் வீட்டுக்கு திரும்பியபோது, அவ்வழியாக வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்தபெண்ணை தடுத்து நிறுத்தி, ஆள் இல்லாத மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது.

மேலும் வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து காயமடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் , 5 பேருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img