spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்காங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்!

காங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்!

- Advertisement -

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நண்பர்களான காங்கிரஸ் கட்சியினருக்கு சாதகமான சூழலை மாற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று  தனது பேச்சுகளை பதிவு செய்திருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் எதுவும் நடைபெறவில்லை! இந்திய விமானி அபிநந்தன் விமானத்தில் இருந்து குதித்த போது, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து விட்டார். அவர் அங்கே போகக் காரணம்… பாகிஸ்தான்!

காஷ்மீர் புல்மாவோவில் இந்திய வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படை பயங்கரவாதியால் வீர மரணம் அடைந்தனர். நாடே கொந்தளித்தது. தன் நாட்டு வீரனை சவப் பெட்டியில் காணும் எந்த நாட்டுத் தலைவனுக்குமே கோபம் வரும். வரவேண்டும்! அது மோடியின் விவகாரத்தில் உணர்ச்சிப் பிரவாகமாக வெளிப்பட்டது.

தேசப் பற்று ரத்தத்தில் ஊறியவனுக்குத்தான் அது போன்ற வார்த்தைகள் அந்நேரம் வெளிப்படும்! பாகிஸ்தான் மிகப் பெரும் தவறு செய்துவிட்டது! இதற்கு நிச்சயம் ஒரு நாள் அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.. என்றார் மோடி.

இத்தனைக்கும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவன் தானே இதனைச் செய்வதாகவும், ஆப்கனில் நடைபெற்ற ஒரு தாக்குதல் வீடியோவை பதிவு செய்து, மத ரீதியான வாசகங்களுடன், சொர்க்கத்தில் தனக்கு தேவதைகள் காத்திருப்பதாகவும் ஒரு கதையைச் சொல்லி, இந்தத் தாக்குதலை உறுதி செய்தான்.

தொடர்ந்து, ஜெய்ஷ் இ மொஹம்மத் தாங்களே தாக்குதல் நடத்தினோம் என்று பகிரங்கமாக அறிவித்தது. அதையும் கேட்டுக் கொண்டு, நாடும் ராணுவமும் நாட்டின் ஆட்சியாளனும் கைகட்டி வேடிக்கையா பார்த்துக் கொண்டிருப்பார்கள்!?

ராணுவத்தின் கைகள் அவிழ்த்து விடப்பட்டன. நீங்களாயிற்று, பாகிஸ்தானாயிற்று! பிரச்னைகள் வராமல் நாங்கள் அடிப்படைப் பணிகளை கவனிக்கிறோம்! தாக்குதலை நீங்கள் திட்டமிடுங்கள் என்று மோடி ராணுவத்துக்கு சுதந்திரம் கொடுத்தார்.

ராணுவமும் தங்கள் இலக்கு அந்த ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதக் கூடாரமும், தலைவனுமே என்று தீர்மானித்தது. திட்டம் தயாரானது. ஏற்கெனவே ஒரு துல்லியத் தாக்குதல் நடத்தி அனுபவப் பட்ட ராணுவத்துக்கு இந்த முறை விமானத் தாக்குதல் கை கொடுத்தது.

பயஙகரவாதிகளின் கூடாரம் மட்டுமே இலக்கானது. பாகிஸ்தான் மக்களோ, ராணுவமோ இலக்கு ஆகவில்லை! சொல்லப் போனால், நாடே கொந்தளித்த தாக்குதலுக்க்குப் பொறுப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் தலைவன் மசூத் அசாரை கைது செய்து, அல்லது விசாரணைக்கு உட்படுத்தி, அல்லது இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதற்கான ஏதாவது ஒரு முன்முயற்சியை பாகிஸ்தான் எடுத்திருந்தால், இந்தத் தாக்குதல் நடந்திருக்காது.

புல்வாமோ தாக்குதல் நடந்து சுமார் 12 நாட்கள் ஆன நிலையில்தான் பதில் தாக்குதல் தொடுக்கப் படுகிறது. அப்போதும், பாகிஸ்தானின் எல்லைக்குள் சென்று, கீழே இறங்காமல் வான் தாக்குதலில் மட்டுமே இந்திய ராணுவம் சுமார் 20 நிமிடங்கள் ஈடுபட்டது.

ஆனால், இந்தியா தங்கள் நாட்டின் இறையாண்மையை மதிக்கவில்லை என்று இதற்குச் சொல்கிறார் இம்ரான் கான்!

மும்பையில் கசாப் கொடுத்த வாக்குமூலத்தில், பாகிஸ்தான் ராணுவமும் உளவு அமைப்பும், மும்பையை நாம் கைப்பற்றப் போகிறோம். நீங்கள் முதலில் சென்று கண்ணில் பட்டவர்களை காலி செய்யுங்கள். நாங்கள் பின்னேயே வந்து உங்களுக்கு பேக் அப் கொடுக்கிறோம். வான்வழியிலும் கடல் வழியிலும் என்று உறுதி கொடுத்ததாக கசாப் கூறியிருந்தான். அப்போது இந்திய நாட்டின் இறையாண்மையை பாகிஸ்தான் மதித்ததா?

காஷ்மீருக்குள் அறிவிக்கப் படாத போரை நடத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், இந்தியாவின் இறையாண்மையை மதித்ததா?

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0வைத் தொடர்ந்து, பதில் தாக்குதல் தொடுக்கப் போவதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், யாரை நோக்கி சுடுவது? பாகிஸ்தான் பழி தீர்க்கும் அளவுக்கு இங்கே பிரிவினைவாதிகளோ பயங்கரவாதிகளோ இல்லையே! ஆனால் அது தாக்கியது காஷ்மீர் மக்களை! ராணுவ முகாம்களை!

இப்படிப்பட்ட அயோக்கியத் தனமான, அறிவற்ற செயலில் இறங்கிய பாகிஸ்தான், தன் நாட்டு விமானங்களைக் குண்டு போட இந்தியப் பகுதிக்குள் அனுப்ப, அதனைத் துரத்திக் கொண்டு போனது இந்திய விமானங்கள். அப்படிப் போனவர்தான் இந்திய விமானி அபிநந்தன்.

இந்திய விமானியின் துல்லியத் தாக்குதலில் வீழ்ந்தது ஒரு பாகிஸ்தான் விமானம்! அதன் பாகங்கள் இந்திய எல்லைக்குள் விழுந்தன. அதே நேரம் பாகிஸ்தான் விமானங்களில் பதில் தாக்குதலில் இந்திய விமானம் சேதம் அடைந்தது என்பதால், விமானி அபிநந்தன் தன் இருக்கையை உந்தித் தள்ளி, பாராசூட் மூலம் கீழே விழ முயற்சி செய்ய, அவர் கீழே விழுந்தது பாகிஸ்தான் எல்லைக்குள்!

இங்கே இந்திய விமானி தாக்குதல் தொடுக்கச் செல்லவில்லை! வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டினார், அதற்காகத்தான் துரத்திச் சென்றார்.. அவ்வளவுதான்.

எனவே இது போர் என்றோ முதலில் தாக்குதல் என்றோ சொல்லத்தக்க விஷயம் அல்ல!  சொல்லப் போனால், மக்கள் மீதும் ராணுவத்தின் மீதும் முதலில் தாக்குதல் தொடுத்தது பாகிஸ்தானே!

இப்படி சர்வதேச அளவில் ரவுடி நாடு என்று பேர் பெற்றுவிட்ட பாகிஸ்தானே, இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் ஐயர் பாகிஸ்தானுக்குள் சென்று வருவதையும், பாகிஸ்தான் அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பதையும் உலகே அறிந்து வைத்துள்ளது. போதாக்குறைக்கு பஞ்சாப்பின் அசிங்கம் சித்து வேறு பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப் பிடித்து பாசத்தைப் பரிமாறியவர்.

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருக்கம் மிக அதிகம்! காங்கிரஸின் சசிதரூர் தன் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்தை இன்றளவும் மர்ம மரணமாகவே ஆக்கி வைத்திருக்கிறார்.

அவரது பாகிஸ்தான் தோழி மெஹ்ர் தராருக்கும் மனைவி சுனந்தாவுக்கும் டிவிட்டரில் பகிரங்கமாக வார்த்தைப் போர் வெடித்த மறுநாளே சுனந்தாவின் மர்ம மரணம் பல்வேறு மர்மங்களை அவருக்குள் அடக்கியதாகவே முடிந்து போனது! அதில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்ட் என்ற வாசகமும் அமிழ்ந்து போனது!

இப்படி பாகிஸ்தானுக்காகவே  வாழ்ந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்களையும் கட்சியையும் தேர்தல் நேரத்தில் வெற்றி பெற வைப்பதற்காகவே, மோடியின் நான்கரை ஆண்டுகளில் எந்த தாக்குதலையும் நடத்த முடியாமல் யூரி தாக்குதல் போல் நடத்திவிட்டுக் கிடந்த பயங்கரவாதிகளை சரியாக நான்கைந்து மாதம் முன்னர் களம் இறக்கியிருக்கிறது என்றும், புல்வாமோ தாக்குதல்ம் மோடியின் ஆட்சியை அகற்ற ஏதாவது செய்யுங்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் கெஞ்சலுக்காக நடத்தப் பட்ட அப்பட்டமான தாக்குதல் என்றும் தில்லி வட்டாரங்களில் பலமான பேச்சு அடிபடுகிறது.

இப்போது, அதே காங்கிரஸ்காரர்களைக் காப்பாற்ற, திடீர் புத்தர் அவதாரம் எடுத்திருக்கும் இம்ரான் கான், இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதனை தெளிவாக்கியுள்ளார்.

அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் அபிநந்தனை விடுவிக்கிறோம் என்று கூறிய இம்ரான்கான், பதற்றத்தை அதிகரிப்பது யாருக்கும் பயன்தராது என்று கூறியுள்ளார்.

மேலும் வழக்கம்போல் கோழைத்தனமான மறைமுகத் தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தந்துவிட்டு, சொல்லப் போனால், ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக இருந்த மசூத் அசாரை அங்கிருந்து இடம் மாற்றி தெற்கு பாகிஸ்தானுக்கு நகர்த்தி பாதுகாத்துள்ளார். இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஐஎஸ்ஐ அமைப்பின் எச்சரிக்கையை அடுத்து இவ்வாறு மாற்றப் பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் ஊடகங்களே செய்திகளை வெளியிட்டன.

ஆனால், புல்வாமா தாக்குதல் குறித்து எவ்வித ஆதாரமும் இல்லாமல் பாக் மீது இந்தியா குற்றச்சாட்டு தெரிவிக்கிறது என்றும், காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிய இம்ரான்கான், பாகிஸ்தானின் அமைதியை மற்ற நாடுகள் கோழைத்தனமாக நினைக்க கூடாது; நாங்கள் அமைதியான நாடாக இருக்கவே விரும்புகிறோம் என்று சொன்னதுடன் அடுத்து ஒரு முக்கியமான விஷயத்தையும் பகிரங்கமாகச் சொன்னார். அதுதான் காங்கிரஸுக்கும் பாகிஸ்தானின் இந்தத் தீவிர விளையாடல்களுக்கும் உள்ள கள்ள உறவை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்! இந்தியாவில் விளையாட பலமுறை நான் சென்று இருக்கிறேன்! இந்தியாவின் அரசின் செயல்கள் அங்கு பலருக்கு பிடிக்கவில்லை என்பது தெரியும். இந்திய அரசின் சில செயல்பாட்டில் குற்றம் இருப்பதை இந்தியர்கள் புரிந்துகொள்வார்கள் என்றெல்லாம் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசி, காங்கிரஸுக்கு ஊக்கமும் ஊட்டமும் கொடுத்திருக்க்கிறார் இம்ரான் கான்.

என்ன இருந்தாலும், மோடியை அகற்ற ஏதாவது செய்யுங்கள் என்று தன் காங்கிரஸ் எஜமானர்கள் கேட்டுக் கொண்டதை செயல்படுத்திக் கொண்டிருப்பவர் அல்லவா?!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe