பாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக டிவிட்டர் எச்சரிக்கிறதாம்! இமாம் தவ்ஹிதி வேதனை!

Published:

imam tawhidi 1 - 2026

இமாம் மொஹம்மத் தவ்ஹிதி, தனது ட்விட்டர் பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்! டிவிட்டர் என்னுடைய ட்வீட்டுகள் எல்லாம் பாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக எச்சரிக்கைத் தகவல் கொடுக்கும் போதெல்லாம் நான் கேட்க விரும்புவது அதே ட்விட்டர் பாகிஸ்தானுக்கு இதையும் சொல்லுமா என்பதுதான்! அது பயங்கரவாதத்தை ஊக்குவித்து ஆஸ்திரேலியா அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளின் சட்டங்களை மீறுகிறது என்பதைத்தான்!- என்று குறிப்பிட்டு இருக்கிறார்

அவருடைய கருத்துக்கு நிறைய பேர் பதில் கருத்து பதிந்துள்ளனர். அதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிலர் அவருக்கு ஆதரவாகவும் இந்தியாவை பாராட்டியும் பதிவிட்டுள்ளனர்!

இதே போல் இன்னொருவர் தனக்கு ட்விட்டரால் நேர்ந்த சங்கடத்தையும் பதிலாகப் பதிவிட்டுள்ளார்!

நான் ட்விட்டரின் சட்டம் மற்றும் ஊடக தொடர்பு துறைகளுக்கு கேள்வி கேட்டிருந்தேன். அதில் அமெரிக்க பிரஜையான நான் உங்களுடைய சேவையை பயன்படுத்தும் போது எதற்காக பாகிஸ்தானின் அடக்குமுறை மற்றும் மனித நேயமற்ற சட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை என்று #சிலிக்கான்வேலிஷரியா என்ற ஹேஷ்டேக் போட்டு பதிவிட்டிருந்தார்

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

இவ்வாறு நேர்வது உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும்கூட இவ்வாறு பதில் அளித்துள்ளது டிவிட்டர் என்று சிலர் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்

ஒருவர் டிவிட்டர் நிறுவனத்துக்கு பணம் வருவது சவுதி மூலமாகத்தான்! பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பு ஆதரவு வேறு டிவிட்டருக்கு உண்டு என்று பதில் அளித்திருக்கிறார்!

மேலும் ட்விட்டர் பலவித சட்டங்களை மீறி இருக்கிறது என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img