ஜெர்மனி போலீசார், சிறார் ஆபாச வலைதளத்தை நிர்வகித்து வந்த மூவரை, அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஐரோப்பாவைச் சேர்ந்த ஜெர்மனியில், பிராங்பர்ட் நகர போலீசாருக்கு, ‘பாய்ஸ்டவுன்’ என்ற சிறார் ஆபாச வலைதளம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தனிக்குழு அமைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், ஆபாச வலைதளத்தை உருவாக்கி நிர்வகித்து வந்த மூன்று பேர் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து, ஏராளமான ஆபாச படங்கள், கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து, ஜெர்மனி போலீசார் கூறியதாவது:
கடந்த, 2019 முதல், சிறார் ஆபாச தளத்தை இந்த கும்பல் நடத்தி வருவது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட நபர், பராகுவே நாட்டில் பதுங்கி இருந்தார்