தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் நடக்கவிருந்த பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவாணி(22) என்பவருக்கு வரும் மே 13ஆம் தேதி திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஸ்ரீவாணி கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவார் என அவரது வருங்கால கணவரும், அவரின் பெற்றோர்களும் எதிர்பார்த்து கல்யாண ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீ வானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இழப்பு அவரின் குடும்பத்தையும் வருங்கால கணவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.