உள்ளாட்சித் தேர்தலுக்கு.. மே 31-க்குள் அறிவிப்பாணை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

Election Commission - 2026

உள்ளாட்சித் தேர்தலுக்கு மே 31-க்குள் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி கூறியுள்ளது.

திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் வெளியிட்ட தகவலில் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று ஜூன் 6ஆம் தேதிக்கு இந்த வழக்கினை ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.