எச்சரிக்கை! இனி அந்த பெண்ணின் பெயர் திசா… போட்டோ போட வேண்டாம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20191201 WA0047 - 2026

எச்சரிக்கை …. இனி பெயர் போட்டோ போட வேண்டாம். சம்ஷாபாதில் பாதிக்கப்பட்டுள்ள பெண் பெயரை திசா என்று மாற்றம்.

சம்ஷாபாத்தில் பாதிப்புக்குள்ளான பெண்ணின் பெயரை இனி திசா என்று அழைக்க வேண்டும் என்று போலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தப் பெண் மற்றும் அவர் குடும்பத்தினர் போட்டோக்கள் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

‘ஜஸ்டிஸ் ஃபர் திசா’ வுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றனர். இதுதொடர்பாக போலீசார் அதிகாரபூர்வமாக பெண் பெயரை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

நிர்பயா சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரோடு குடும்பத்தினர் விவரங்களும் வெளியிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாதிப்புக்குள்ளான இந்தப் பெண்ணின் பெயரைக் கூட மாற்ற தீர்மானித்தனர். இனி திசா என்ற பெயரில் விவரங்களை வெளியிட வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண், பெற்றோர், தங்கை போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பிரசாரம் ஆவதால் போலீசார் இந்த முடிவு எடுத்துள்ளனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜஸ்டிஸ் ஃபர் திசா என்ற பெயரில் குறிப்பிட வேண்டுமென்று சைபராபாத் சிபி சஜ்ஜனார் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சம்மதிக்க செய்ததாக தெரிவித்தார்.

சோஷல் மீடியா, பிரசார ஊடகங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜஸ்டிஸ் ஃபர் திசா வுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.