திருப்பள்ளியெழுச்சியின் 5வது பனுவலை குறித்து இன்று காண இருக்கிறோம்.
பூதங்கள் தோறும் நின்றாய் என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர், பரம்பொருளான ஈசன் பூதங்கள் தோறும் நின்றான், அவனுக்கு பிறப்பு இறப்பு கிடையாதவன், அப்படிப்பட்ட பரம்பொருளே எம் குறைகளை நீக்கி எம்மை ஆட்கொள்ளவேண்டும் என்று அவனிடம் இறைஞ்சுகிறார்.
நாமும் ஈசனின் நாமங்கள் பாடி அவனடி சரணடைவோம்!



