ஐ.நா.வில்… தமிழர்களைக் கொச்சைப் படுத்திய ‘இஸ்லாமிய அடிப்படைவாதி’ இம்ரான் கான்!

உரத்த சிந்தனை உலகம் சற்றுமுன்
imran khan - 2026

ஐ.நா., சபையில் இலங்கைப் போராட்டத்தைக் குறிப்பிட்டு, தமிழர்களையே கேவலப் படுத்தியுள்ளார் இஸ்லாமிய அடிப்படைவாதியான இம்ரான்கான். மேலும், தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது என்று, இம்ரான் கான் பேசியுள்ளார்.

ஐ.நா. பொது சபையின் கூட்டத்தில் அனுமதிக்கப் பட்ட 15 நிமிட நேரத்தை விட அதிக நேரம், நீட்டி முழக்கிப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விடுதலைப் புலிகள் பேரைக் குறிப்பிட்டு, தமிழர்களின் உரிமைகளைக் கொச்சைப் படுத்திப் பேசினார்.

ஐ.நா. அவையில் பேசிய போது, யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் இந்துக்களான விடுதலைப் புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பேசினார் இம்ரான் கான்.

மேலும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து அவர் கொடுத்த விளக்கத்தில், தீவிர இஸ்லாம் என்றால் என்ன? ஒரே ஒரு இஸ்லாம் மட்டுமே உள்ளது. தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. இந்த இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணம். இது இஸ்லாமியர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது…. என்றார்.

LTTE Flag - 2026

பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதலை நடத்தியது விடுதலைப் புலிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். ஆனால் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனைச் செய்தனர்.” என்று கூறினார் இம்ரான் கான்.

விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், இஸ்லாமிய ஜிஹாத் போரையும் ஒப்பிட்டு இம்ரான் பேசியது, உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் எவரும்,

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பினர், ஜிஹாத் எனும் புனிதப் போரில் ஈடுபடுவதாகக் கூறி வந்தது பாகிஸ்தான். ஜிஹாத் என்பது, இஸ்லாமிய அடிப்படைவாத புனிதப் போர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது உலகம். அதே நேரம், அது மதத்தின் பெயரிலான போர் இல்லை என்றால், ஜிஹாத் என்ற சொல் காஷ்மீர் பயங்கரவாதிகள் விஷயத்தில் பயன்படுத்த இயலாததாகி விடும். ஆனால், காஷ்மீரில் ஜிஹாத் புனிதப் போர் இருப்பதாகத்தான் அனைத்து பயங்கரவாத இயக்கங்களும் கூறி, அரபு நாடுகளிடம் இருந்து நிதி பெற்று வந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.