அமெரிக்க வாழ் இந்தியர் உள்பட மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்!

Published:

IMG 20191014 WA0010 - 2026

2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டின் பொருளாதரத்திற்கான நோபல் பரிசை பெற்றார் இந்தியரான அபிஜித் பானர்ஜி. எஸ்தர் டப்பல்லோ, மைக்கேல் கிரம்மர் மற்றும் அபிஜித் பானர்ஜி ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

இந்தாண்டுக்கான, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அமெரிக்க வாழ் பிரெஞ்சுக்காரரான அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரம்மர் ஆகியோருக்கு, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்து படித்த அபிஜித் பானர்ஜி, டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்தில், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவின் மெசசூட்ஸ் தொழில்நுட்ப கல்விக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

Poor Economics என்ற தலைப்பில், அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோவும் இணைந்து எழுதியுள்ள புத்தகம், உலக பொருளாதார நிபுணர்கள் மத்தியில் புகழ்பெற்றது.

உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக அபிஜித் பானர்ஜிக்கும், அவரது மனைவிக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான மைக்கேல் கிரம்மர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img