“About-ஆ? Nearly-யா?..”
(பேராசிரியர்களுக்கே சில கல்வி நுட்பங்களைக் கற்பித்து அனுப்பின பெரியவா)
சொன்னவர்-எஸ்.வெங்கட்டராமன்
தொகுத்தவர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மயிலாடுதுறை கல்லூரியிலிருந்து இரண்டு பேராசிரியர்கள் ஸ்ரீஸ்வாமிகள் தரிசனத்துக்கு வந்தார்கள். ஒருவர்,வணிகவியல் மற்றவர் சம்ஸ்க்ருதம்.
வணிகவியல் பேராசிரியரைப் பார்த்து, “உனக்கு எந்த ஊர்?” என்று கேட்டார் ஸ்ரீஸ்வாமிகள்.
“வால்டேர்…”
“இங்கேருந்து எவ்வளவு தூரம்?”
“About தௌஸண்ட் மைல்ஸ்…”
“About-ஆ? Nearly-யா?..”
பேராசிரியர் திக்குமுக்காடிப் போனார்.சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை
பெரியவாளே பதில் சொன்னார்,”எபௌட்-ன்னா, ஏறத்தாழ-ன்னு அர்த்தம்.கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்-என்ற மாதிரி..நியர்லி-ன்னா,கிட்டத்தட்ட-ன்னு அர்த்தம்.ஆயிரம் மைலுக்குக் கீழேன்னு அர்த்தம். அப்படித்தானே?” என்று சொல்லிவிட்டு, வடமொழிப் பேராசிரியரைப் பார்த்தார்.
“நீ என்ன படிச்சிருக்கே?”
“ஸான்ஸ்க்ரீட் எம்.ஏ..”
“அதாவது,ஸம்ஸ்க்ருதம் பற்றிப் படிச்சிருக்கே! அப்போ,சம்ஸ்க்ருதம் எப்போ படிக்கப் போறே?”
வடமொழி வித்வான் திகைத்தார்.
“ஸாஹித்யம்,வ்யாகரணம் என்ற மாதிரி சிரோமணி படிச்சா தான், ஸம்ஸ்க்ருதம் படிச்சதா ஆகும்.ஹிஸ்டரி எம்.ஏ, தமிழ் எம்.ஏ-ன்னா, ஹிஸ்டரியைப் பற்றி, தமிழைப் பற்றி படிச்சதாகத்தானே ஆகும்?..
பேராசிரியர்களுக்கே சில கல்வி நுட்பங்களைக் கற்பித்து அனுப்பினார், ஸ்ரீ ஸ்வாமிகள்
About-ஆ? Nearly-யா?.. பேராசிரியர்களுக்கே சில நுட்பங்களைக் கற்பித்த பெரியவா…
Popular Categories



