பிறந்து 30 மணி நேரத்தில்… குழந்தைக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
corano child - 2026

சீனாவில் வூகான் பகுதியில் பிறந்து 30 மணி நேரமே ஆன பெண் சிசுவுக்கு கொரனோ வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் குறைந்த வயதுடைய கொரானோ வைரஸ் பாதிப்புடைய நோயாளி இந்த குழந்தைதான்.

கர்ப்பிணியாக இருந்த பெண், பேறு காலத்தில் கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானார். இந்நிலையில் இந்த வைரஸ் நோய் கருப்பையில் உள்ள குழந்தைக்குப் பரவியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

புதன்கிழமை நேற்று இந்தக் குழந்தை குறித்த செய்தி, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையில் பிரசுரமானது. அந்தக் குழந்தை பிறந்த 30 மணி நேரத்தில், சோதனைகள் செய்த போது, குழந்தைக்கும் கொரானோ வைரஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. அந்த குழந்தைக்கு பிறந்த உடனே நோய் தாக்கியிருக்கலாம் என்று ஒருபுறம் கூறப்படும் நிலையில், வுஹான் குழந்தைகள் மருத்துவமனையில் டாக்டர் லிங்காங் கூறுகையில், ஒரு நபரிடம் இருந்து அடுத்தவருக்கு வைரஸ் தொற்று பரவுவது குறித்த எண்ணத்தை இந்தச் சம்பவம் காட்டியிருக்கிறது என்றார்.

இவ்வளவுக்கும் மற்ற நோயாளிகளிடம் இருந்து இந்த கர்ப்பிணிப் பெண் தனித்து வைத்து பாதுகாக்கப் பட்டார். ஆயினும் குழந்தைக்கும் இந்த வைரஸ் தொற்று வந்துள்ளது. இப்போது குழந்தை இன்க்யுபேட்டரில் வைத்து பாதுகாக்கப் பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.