
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 11-ம் தேதி முதல் பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 11-ம் தேதி முதல் பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

குறிப்பாக பட்ஜெட் விலையில் மக்கள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, தவிர இந்த ஸ்மார்ட்போனில் கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் அட்லாண்டிஸ் ப்ளூ, மேட்ரிக்ஸ் பர்பில் மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுகம் சலுகைகளை
பொறுத்தவரை தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000-வரை தள்ளுபடி பெறலாம், பின்பு ஈஎம்ஐ சலுகைகளும் உள்ளது.

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் அளவிலான முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1080×2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பொறுத்தவரை இன்டெலிஜெண்ட் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்” தொழில்நுட்பத்துடன் வருகிறது. எனவே துல்லியாமன காட்சிகளை வழங்கும், பின்பு ரெஃப்ரெஷ் ரேட்டை தானாகவே மாற்றியமைக்கும்.

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசிசிப்செட் இடம்பெற்றுள்ளது, இதனுடன் அட்ரினோ 618ஜிபியு வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது.
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தில் கிராபிக்ஸ் ரெண்டரிங்கை அதிகரிக்க இரண்டாம் தலைமுறை கேம் டர்போ மோட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் கஸ்டம் லிக்விட்கூல் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது,
பின்பு 20எம்பி 2எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்றவைகள் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் செல்பீ கேமரா ஆனது, பனோரமா செல்பீ மோட், யுஐ பேஸ் டிஸ்டார்ஷன் கரெக்ஷன், யுஐ பியூடிப்பை, யுஐ போர்ட்ரெயிட் மோட் போன்ற அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள் போக்கோ எக்ஸ் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 27வாட் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக 68நிமிடங்களில் இந்த சாதனத்தம் 100சதவிகிதம் சார்ஜை வழங்கும்.