கொரோனா: மேலும் ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் உயிரிழப்பு!

உலகம் பொது தகவல்கள்
petriya - 2026

பொதுவாக ஹாலிவுட் நட்சத்திரங்கள் 90 வயதுக்கு மேல் வாழ்வார்கள். தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் முதியவர்களுக்கு எளிதாக பரவி அவர்களின் உயிரை எடுத்துக் கொண்டு வருகிறது.

இதுவரை 60 வயதை கடந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க், எட்டி ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இறந்து இருக்கிறார்கள்.இந்த நிலையில் மற்றுமொரு ஹாலிவுட் நடிகையான பேட்ரியா பாஸ்வொர்த்தும் இந்த நோய்க்கு உயிரிழந்து உள்ளார். அவருக்கு வயது 86.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்தார்.கலிபோர்னியாவைச் சேர்ந்த பேட்ரியா, கருப்பு வெள்ளை ஹாலிவுட் படங்களின் நாயகியாக இருந்தார்.

ரெட் ஸ்கோர், கோல்ட் வார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு எழுத்தாளரும் கூட நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.