
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் எகிப்து நாட்டில் அரங்கேறிய காதல் உலகில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முஹம்மது ஃபாமி என்பவர் கொரோனா நோய் தொற்றால் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சிகிச்சை பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முஹம்மது ஃபாமி மோதிரம் அணிந்து ஆயிஷாவிடம் காதலை வெளிபடுத்தியுள்ளார். ஆனால் ஆயிஷாவும் இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவரது காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.