அமெரிக்க அதிபர் மகள் இந்தியா வருகிறார்: மோடி டிவிட்!

உலகம் சற்றுமுன்

trumb modi white house entrance - 2026

வாஷிங்க்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் வரும் நவம்பர் மாதம் இந்தியா வரவுள்ளார். அதுகுறித்த அவரது டிவிட்டுக்கு பிரதமர் மோடி பதில் டிவிட் அளித்து வரவேற்றுள்ளார்.

ஐதரபாத்தில் வரும் நவம்பர் மாதம் தொழில் முனைவோருக்கான உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க பிரநிதிகள் குழுவும் கலந்து கொள்கிறது. இந்த குழுவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் தலைமை தாங்கி இந்தியா வருகிறார். டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். இவாங்கா டிரம்பும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய பயணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இவாங்கா டிரம்பின் டுவிட் தகவலை வரவேற்று பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் குழு சார்பில் உலக தொழில் முனைவோருக்கான மாநாடு, வரும் நவம்பர் மாதம் 28-30 தேதிகளில் ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த மாநாடு மூலம் இந்தியாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய தொழில் வாயப்புகளை பெறுவதற்காக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.