புயல் பாதித்த அமெரிக்கர்களுக்கு இலவச உணவு வழங்கும் தமிழர்

Published:

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் இளைஞன் ஒருவர் இலவச உணவு வழங்கி வருகின்றார்.

அமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வரும் தமிழக இளைஞரான தினேஷ்குமாரே இவ்வாறு இலவச உணவுகளை வழங்கி வருகின்றார். அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக புயல் மற்றும் கனமழை காரணமாக ஃப்ளோரிடா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இர்மா புயல் கரையைக் கடந்தாலும் மழை அதிக அளவில் இருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மக்கள் தங்குவதற்காக தேவாலயங்கள் திறந்து விடப்பட்டுள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவின் 3 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழக உணவு விடுதியான “அம்மாஸ் கிச்சன்” அமெரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை பின்பற்றி அமெரிக்காவிலும் “அம்மாஸ் கிச்சன்” என்ற உணவகத்தைத் தொடங்கியுள்ளார் 30 வயது இளைஞரான தினேஷ்குமார். இவரது இந்த மகத்தான செயற்பாட்டுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. தரமான உணவு, குறைந்த விலை, மண்ணின் சுவை உள்ளிட்டவற்றை அளித்து வந்த அமெரிக்க வாழ் இந்தியரான தினேஷ்குமார் தற்போது இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

News: K.C. Samy

Related articles

Recent articles

spot_img