30 பேரால் அடுத்தடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம்! மூச்சுத்திணறிய சிறுமி.. மருத்துவமனையில் அனுமதி!

உலகம் கிரைம் நியூஸ்
vankodumai 1

இஸ்ரேலில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்ற சிறுமி குடி போதையில் இருக்கும் போது அவரை 30 பேர் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் கடலோர பகுதியில் உள்ள டெல் அவிங் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு 16 வயதுடைய சிறுமி தனது ஆண் நண்பர்களுடன் சென்றுள்ளார்

அங்கு தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அதில் ஒரு நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது சிறுமியின் சமதத்துடன் நடந்தது என கூறப்படுகிறது.

பின்பு சிறுமி குளியலறைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு நபர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பின்னர் வெளியே வந்த சிறுமியை கும்பலாக பாலியல் சீண்டல் செய்துள்ளனர். அதில் ஒரு நபர் வெளியே நின்று கொண்டு ஒவ்வொருவராக அறைக்குள் செல்ல அனுமதி அளித்துள்ளார். 30 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இவர்கள் ஒருவருக்கொருவர் முன் அறிமுகம் இல்லாதவர்கள். மேலும் ஒவ்வொருவரும் தனித்தனியே அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி மயக்கம் அடைந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் மூச்சு திணறல் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் அதன் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுமிக்கு ஏற்ப்பட்ட நிகழ்வு மனித குலத்திற்கு எதிரானது. இதனால் மிகவும் மனவருத்தத்தில் உள்ளேன். இரு ஒரு பெண்ணுக்கு எதிராக மட்டும் நடந்த குற்றமல்ல. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார். இந்த சம்வத்தில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.