ஜோ பிடனுடன் மட்டுமல்ல… டிவிட்டருடனும் மல்லுக்கட்டும் டிரம்ப்!

trump-us
trump-us

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீர் பேட்டி அளித்துள்ளார். அதுவும், அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பேட்டி அளித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது… தேர்தலில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி! பெரிய கொண்டாட்டத்திற்காக காத்திருக்கிறோம். தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டு இருக்கின்றன. மக்கள் பல சாதனைகளை முறியடிக்கும் விதத்தில் வாக்களித்து உள்ளனர்….

ALSO READ: ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி… அனுமன் கோயிலில் அர்ஜுன் சம்பத் வழிபாடு!

பைடனால் என்னை வெற்றி கொள்ள முடியாது. புளோரிடா மாகாணத்தில் எதிர்பாராத அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எதிர்பாராத மாகாணங்களில் கூட வெற்றி கிடைத்துள்ளது. டெக்சாசில் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த முறை ஆதரிப்போரின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளோம்… என்று கூறினார் டிரம்ப்.

அதுவும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வெற்றி என டிரம்ப் பேட்டி அளித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

trumptweet
trumptweet

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.270 இடங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நிலையில், கடைசியாகக் கிடைத்த நிலவரப்படி, ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 238 இடங்களையும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 213 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் சில இடங்களில் எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், டிரம்ப் வெற்றித் தெம்புடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ALSO READ : இழுபறிதான்.. ஆனாலும் ட்ரம்ப் மீண்டும் அதிபராவார்! ஜோதிடர் பச்சைராஜென் கணிப்பு!

மேலும், அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘நாம் மாபெரும் வெற்றியை எதிர் நோக்கியுள்ளோம். ஆனால் அவர்கள் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கின்றனர்.ஒருபோதும் அவர்கள் சதி செய்ய விடமாட்டோம். வாக்குச் சாவடிகள் மூடப்பட்ட பிறகு வாக்களிக்க முடியாது!’ என பதிவிட்டிருந்தார்.

தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவுற்று, எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், ட்ரம்பின் இப்பதிவை ட்விட்டர் அதிரடியாக நீக்கியுள்ளது. “இந்த ட்விட் ட்விட்டரின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது. இது தேர்தல் செயல்பாட்டை தவறாக வழிநடத்தக் கூடும்” என்று ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது.

இப்போது இதற்கும் சேர்த்து டிவிட்டருடன் மல்லுக்கட்டி வருகின்றனர் டிரம்ப் ஆதரவாளர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories