இழுபறிதான்.. ஆனாலும் ட்ரம்ப் மீண்டும் அதிபராவார்! ஜோதிடர் பச்சைராஜென் கணிப்பு!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

trump-vs-joe-biden
trump-vs-joe-biden

அமெரிக்க அதிபர் தேர்தல்  2020 இப்போது இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு நாளே உள்ள நிலையி,  அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் போட்டி நிலவும் மாகாணங்களான மிச்சிகன், அயோவா மற்றும் வடக்கு கரோலின் ஆகியவற்றில் பேரணிகளை நடத்தினார் . ஜார்ஜியா மற்றும் புளோரிடாவில் திட்டமிடப்பட்ட பிரசாரங்களை மேற்கொண்டார்.

பிடெனுடன் கடும் போட்டி நிலவும் மாகாணமான பென்சில்வேனியாவில்  மக்களிடம் பேசினார்.  பிடென் தனது பிரச்சாரத்தை பிட்ஸ்பர்க்கில் நிறைவு செய்ய உள்ளார்,  

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோபிடன் ஆகியோர் சரிசமமான அளவில் வாக்கு சதத்தைப் பெறுவர் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன அதேநேரம் இந்த தேர்தலில் ஜோ பிடன் கை சற்று உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்புகளில், டிரம்ப் 51% பிடனுடன் ஒப்பிடும்போது 42% வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்று சமீபத்திய ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், நியூயார்க் டைம்ஸ் கருத்துக் கணிப்பு, விஸ்கான்சின், பென்சில்வேனியா, புளோரிடா மற்றும் அரிசோனா ஆகிய 4 முக்கியமான ஸ்விங் மாநிலங்களை விட ஜோ பிடென் ஆதரவு அதிகம்  கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. பிடனின் தேர்தல் நிலைப்பாடு 2008 முதல் எந்தவொரு அதிபர் வேட்பாளரை விடவும் அவரை ஒரு வலுவான நிலையில் வைத்திருப்பதாகத் தெரிகிறது… என்கின்றனர்.

இதற்கிடையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது போட்டியாளரான ஜோ பிடென் இருவரின் இந்திய-அமெரிக்க ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தினர்,  

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
pachai rajan prediction
pachai rajan prediction

இதனிடையே இந்தியாவிலும் சில ஜோதிடர்க, டிரம்ப், ஜோ பிடன் ஆகியோரின் ஜாதகங்களை முன்வைத்து யார் வெற்றி பெறுவார்கள் என்று தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.. தமிழகத்தில் பிரபல ஜோதிடரான பச்சைராஜென் தனது கணிப்பு பற்றி நம்மிடம் தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயிப்பது யார் டிரம்பா அல்லது அவரது போட்டியாளரான ஜோ பிடனா என்று இது குறித்த செய்திகளை கேள்விப்படும் ஒவ்வொரு  முறையும் இன்று நான் நிமித்த ஜோதிடம் என்ற பிரச்ன முறையில் போட்டுப் பார்த்தேன். 12 முறை பார்த்ததில் ஏழுமுறை டிரம்புக்கு ஆதரவாகவே கணிப்பு வந்தது. முன்னர்  ஜோ பிடன்க்கு சாதகமாக  கணிப்பு வந்தது மூன்றில் இரண்டு முறை பிரசன்ன ஜோதிடம் பார்த்த போது நிமித்த ஜோதிடத்தில் பலன் வந்தது 

கடுமையான போட்டி மற்றும் பின்னடைவுகளுக்கு மத்தியில் ஒரு துளியில் தற்போதைய அதிபர் மீண்டும் அதிபராக வருவார் என்று நிமித்த ஜோதிடத்தில் தெரியவருகிறது. கடுமையான போராட்டத்தில் கடைசி நொடியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பிரசன்ன ஜோதிடத்தில் வந்திருப்பதாக ஜோதிடர் பச்சை ராஜன் நம்மிடம் கூறினார் 

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img