ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்கள் மேலாக தன்னெழுச்சியாக போராடி வந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட அரசாணை வெளியிட்டு உள்ளது தமிழக அரசு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



