ஜனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தேதி… பக்தர்கள் மகிழ்ச்சி!

Published:

cholavatan-janakai-mariamman
cholavatan-janakai-mariamman

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா,
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் என்று மாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் திருப்பணி கமிட்டியினர் கோடி முடிவு செய்துள்ளனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரபலமான கோவில் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வருகின்றனர் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி பல ஆண்டுகள் ஆனதால் கும்பாபிஷேகம் நடத்த இக்கோவில் பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்

இதையொட்டி கடந்த வருடம் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாணிக்கம் எம்எல்ஏ திருப்பணி கமிட்டித் தலைவர் பதஞ்சலி சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் முன்னிலையில் பாலாலயம் விழா நடந்தது திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கும்பாபிஷேகம் நடத்த அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது இதன் காரணமாக கும்பாபிசேகம் ஒத்திவைக்கப்பட்டது .

cholavatan-janakai-mariamman1
cholavatan-janakai-mariamman1

தற்போது தளர்வு கலை அரசு அறிவித்துள்ளது இதன்பேரில், நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்களும் கும்பாபிஷேகத்தை நடத்த கோரிக்கை வைத்தனர். இதையொட்டி , ஜெனகை மாரியம்மன் கோவில் வளாகத்தில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருப்பணி கமிட்டி தலைவர் பதஞ்சலி சுப்ரமணியன் செட்டியார் தலைமை தாங்கினார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

துணைத் தலைவர்கள் எம்விஎம் மணி என்ற முத்தையா எம்கே முருகேசன் கொரியர் கணேசன் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் பால்பாண்டி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் இளஞ்செழியன் வரவேற்றார். திருப்பணிக் கமிட்டி கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ வருகிற ஜனவரி 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார் .

இதில், சின்னப்பாண்டி சீர்பாத முருகேசன் கார்த்திக் வக்கீல் குருநாதன் ஆலயமணி துறை புஷ்பம் பொன்ராஜ் மாருதி சேது ஜவர்லால் பிஜேபி முருகன் முருகன் ராஜீஜோதி கந்தசாமி சுகுமார் முனியாண்டி முன்னாள் வி ஏ ஓ ராமநாதன் கருப்பட்டி செந்தில்குமார் கருப்பையா பார்வர்ட் பிளாக் தர்மராஜ் தீயணைப்பு துறை முருகேசன் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினார்கள் .
ஆலயப் பணியாளர்கள் பூபதி நன்றி கூறினார்.

Related articles

Recent articles

spot_img