அமெரிக்காவில் துப்பாக்கி சூடு! 10 பேர் உயிரிழப்பு!

Published:

us - 2026

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் மோசமாகி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்காவில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் அங்கு நடந்துள்ளது.

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் இன்று மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அங்கு உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.

இதையடுத்து உடனே அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக பதில் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மொத்தமாக 10 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கி சூட்டை நடத்திய மர்ம நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் ஏன் துப்பாக்கி சூடு நடத்தினார் என்று விவரங்கள் வெளியாகவில்லை.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img