கொரோனா: டெல்டா போச்சு லாம்ப்டா வருது டும் டும்..! ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

corona-test
corona-test

இந்தியாவில் மிக மோசான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிடப் புதிதாகக் கண்டறியப்பட்ட லாம்ப்டா கொரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசியா சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. உலக வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டில் கொரோனா உச்சமடைந்து, பின்னர் குறைகிறது. அத்துடன் வைரஸ் பாதிப்பு முடிந்துவிட்டதாகக் கருதும்போது மீண்டும் அடுத்த அலை தாக்குகிறது.

இப்படி அலை அலையாக வைரஸ் பாதிப்பு ஏற்பட கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதே முக்கிய காரணமாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை மோசமான பாதிப்புகளை ஏற்படுகின்றன.

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை டெல்டா கொரோனாவால் ஏற்பட்டது. இந்த டெல்டா கொரோனா தான் உலகின் பல நாடுகளில் அடுத்த அலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இப்படித் தொடர்ந்து கொரோனா உருமாறுவது சிக்கலை அதிகரித்துள்ளது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

இந்நிலையில், தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

லாம்ப்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனைக் கவனிக்கப்பட வேண்டிய கொரோனா என்றும் உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

இந்தச் சூழலில் இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிட லம்ப்டா கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

லாம்ப்டா கொரோனாவால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிப்பதாகவும் மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது கொரோனா அடுத்த அலையை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பெரு நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 82% லாம்ப்டா கொரோனா வகையால் ஏற்பட்டவை. மற்றொரு தென் அமெரிக்க நாடான சிலியில் 31% பேருக்கு லாம்ப்டா கொரோனா ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

பிரிட்டன் நாட்டில் இப்போது ஆறு பேருக்கு மட்டுமே லாம்ப்டா கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது எந்தளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும், தடுப்பூசிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories