சுவருக்குள் இருந்து வந்த அலறல்! நிர்வாண நிலையில் மாட்டிக் கொண்ட பெண்! பிறகு..?!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
woman in between walls - 2026

சுவருக்குள்ளிருந்து பெண்ணின் அலறல். விசித்திரமான நிகழ்வுகள் உலகில் அவ்வப்போது நிகழ்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை திடீரென வெளிவருகின்றன. அவற்றை நேராக கண்ணால் பார்க்காவிட்டால் நம்புவது கூட கடினம்.

இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

ஒரு பெண் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் 8 அங்குல இடைவெளியில் சிக்கி நரக வேதனை அடைந்தார். அந்தப் பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டபோது ​​அவரது நிலையைப் பார்த்து உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது.

கலிபோர்னியாவின் ஹார்பர் பௌலேவார்ட் சாலையில்.. கார் ஸ்டீரியோ கடையின் சுவருக்கும் ஆட்டோ கடையின் சுவருக்கும் இடையில் ஒரு பெண் சிக்கிக் கொண்டார்.

வழக்கம் போல கடை ஊழியர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். மதியம் இரண்டு மணியளவில் சுவரில் இருந்து விசித்திரமான சத்தம் கேட்டது. கூர்மையாக செவி கொடுத்துக் கேட்ட போது ஒரு பெண்ணின் அழுகுரல் போலிருந்தது.

இந்த விவகாரம் உடனடியாக போலீசில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார் ஸ்டீரியோ கடையின் மாடிக்குச் சென்று கீழே பார்த்தார்கள். இரு கடைகளின் இடைவெளிக்கு நடுவில் ஒரு பெண்ணை நிர்வாணமாகக் கண்டு வியந்தனர். அந்தப் பெண் கடுமையான வேதனையில் இருந்தார். உடனடியாக மீட்புக் குழு மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டரை மணி நேரம் மீட்பு நடவடிக்கைக்குப் பின் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக சுவரில் இருந்து வெளியேற்றினர்.

உண்மையில் ஏன் சுவரில் சிக்கிக்கொண்டார்? நிர்வாணமாக இருப்பதற்கான காரணம் என்ன? இப்போது அப்பெண்ணின் நிலை எப்படி இருக்கிறது? இந்த விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைரலாகி வரும் வீடியோ இதோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.