Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஉலகம்சீனாவில் புல்லெட் ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலி..

சீனாவில் புல்லெட் ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலி..

சீனாவில் புல்லெட் ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலியாகியுள்ளார்.

சீனாவின் தென்கிழ மாகாணமான கின்யாங்கில் இருந்து தெற்கு மாகாணமான கன்ங்சொவ் பகுதிக்கு இன்று காலை 10 மணியளவில் புல்லெட் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த புல்லெட் ரயிலில் 136 பயணிகள் பயணித்தனர்.

ரோங்க்ஜுகங் என்ற பகுதியில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புல்லெட் ரயிலின் டிரைவர் உயிரிழந்தார். மேலும் 7 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு வேகமாக சென்றுகொண்டிருந்த ரயிலின் 7, 8வது பெட்டிகள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.