To Read it in other Indian languages…

Home உலகம் கம்போடியாவில் பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி..

கம்போடியாவில் பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி..

1672298730194626 - Dhinasari Tamil

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் எல்லைப்பகுதியான பாய்பெட்டில் உள்ள கிராண்ட் டைமண்ட் சிட்டி கேசினோ என்ற ஓட்டல் உள்ளது. இங்கு நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஓட்டலில் பல்வேறு அறைகளுக்கு மலமலவென நெருப்பு பரவியது.

இதில் ஓட்டலில் உள்ள ஊழியர்கள் பலர் சிக்கி கொண்டனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் ஓட்டல் கட்டட்ம் முழுவதும் உருக்குலைந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட சிலர் ஓட்டல் ஜன்னல் வழியாக குதித்து வெளியே இருந்தவர்கள் உதவியுடன் தப்பினர். அதற்க்குள் அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கிட்டத்தட்ட 53 பேரை தீக்காயங்களுடன் மீட்டனர்.

மேலும் கொளுந்து விட்ட எரிந்த நெருப்பை 6 மணி நேரம் போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tamil News large 3205854 - Dhinasari Tamil

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.