mcms 1 1 - 2026

நேபாளத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து..

உலகம்
mcms 1 1 - 2026

நேபாளத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காத்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது.

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காத்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

1821818 pland - 2026
ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.