பிணைக் கைதிகளை கழுத்தறுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதி யார்?: வெளியான தகவலால் பரபரப்பு

Published:

is_jihadi_john_001வெளிநாட்டு பிணைக் கைதிகளை கழுத்தறுத்துக் கொல்லும் ஐ.எஸ் பயங்கரவாதி தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமது அமைப்புக்கு எதிராகச் செயல்படும் நாட்டுக் குடிமக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தப் பிணைக் கைதிகளை தலையைத் துண்டிக்கும் வீடியோ காட்சிகளில் முகமூடியுடன் தோன்றிய ஐ.எஸ் பயங்கரவாதி யார் என்பது பற்றி விவரங்கள் சில வெளியாகியுள்ளன. ஜிஹாதி ஜோன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் மொஹமட் எம்வாசி(Mohammed Emwazi). இவர் குவைத்தில் பிறந்து மேற்கு லண்டனில் வசிக்கும் பிரிட்டன் குடிமகன். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் போலியை தலைத் துண்டிக்கும் வீடியோ முதல் பல்வேறு வீடியோவில் மொஹமட் எம்வாசி தோன்றியுள்ளார். இவர் குறித்து பிரிட்டன் போலீசாருக்கு ஏற்கேனவே தகவல்கள் தெரியும் என்று சர்வதேச ஊடகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img