BoycottTurkey – துருக்கியைப் புறக்கணிப்போம்! வலுக்கும் இந்தியர்களின் கோரிக்கைகள்!

Published:

boycot turkey amid tensions over indo pak issue - 2026

பஹல்காம் பயங்கரவாதச் சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து, அவர்களைக் களையெடுக்கும் நோக்கில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட  ஆபரேஷன் சிந்தூர்க்குப் பின், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் களம் இறங்கியது. அது, சீனா கொடுத்த ஏவுகணைகள், துருக்கி அளித்த ட்ரோன்களைக் கொண்டு, இந்தியாவின் மீது தாக்கியது. 

இந்தத் தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இந்தியா தடுத்து விட்டாலும், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் புற கிராமங்களில் ஓரிரண்டு விழுந்து அங்கே வசிக்கும் கிராம மக்களின் வீடுகளைப் பதம் பார்த்தது. சிலர் இதில் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் அப்பாவிப் பொதுமக்களை நோக்கி அதிகளவில் இருந்த போது, இந்திய ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு, இந்தியப் பகுதிகளில் விழுந்த ட்ரோன்களின் பாகங்களை ஆய்வு செய்த போது, அவை துருக்கியில் தயாரானவை என்பது தெரியவந்தது. 

அதே நேரம், துருக்கியில் இருந்து ஒரு விமானத்தில் மேலும் அதிக எண்ணிக்கையில் ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் துருக்கியோ, எரிபொருள் நிரப்ப அந்த விமானம் பாகிஸ்தானுக்குள் வந்ததாக ஒரு கதையைப் பரப்பியது. ஆனால், துருக்கியின் விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தளவாடங்கள் வந்ததாகவே அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

முன்னதாக,  அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தை அடுத்து, அந்நாட்டுக்கு முதல் நாடாக மனிதாபிமானப் பொருள்கள் கொண்டு சென்று, உதவிக்கு ராணுவத்தினரையும் அனுப்பி வைத்த இந்திய நாட்டுக்கு, துருக்கி மிகச் சரியான நன்றிக்கடனை காட்டி விட்டது என்று, இந்தியாவில் பொதுமக்கள் பொருமித் தள்ளினர். இது போன்ற நாடுகளுக்கு இந்தியா கருணை அடிபடையில் உதவிகள் வழங்குதை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் பலமாக எதிரொலித்தன. 

இதனிடையே, பாகிஸ்ஹான் மீதான இந்தியாவின்  தாக்குதலில் இரண்டு துருக்கி வீரர்களும் உயிரிழந்ததாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால் பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட பலர், துருக்கியைப் புறக்கணிப்போம் என்ற வாசகங்களுடன் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் முதலாவதாக, துருக்கி நாட்டுக்கு இந்தியாவின் பெரிய பங்களிப்பு சுற்றுலாதான். எனவே இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சுற்றூலா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

இதற்கு ஏற்றார்ப் போல், துருக்கிக்கான சுற்றுலா சேவையை நிறுத்திக் கொள்வதாக இந்தியாவின் சுற்றுலா நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட விஷயம் சூடு பிடித்தது. இது எங்கே ஒரு மாலத்தீவு பிரச்னையைப் போல் சென்று விடுமோ என்று  நினைத்த துருக்கிய அரசின் சுற்றுலாத் துறை அவசர அவசமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

அதில், துருக்கிக்கு இந்தியர்கள் சுற்றுலா வர, இத்தகைய சூழலைக் கருதி தயங்க வேண்டாம். இந்தியர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்போம். இந்தியர்களுக்கு வழக்கமான மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்படும். எனவே துருக்கிக்கு சுற்றுலா வாருங்கள் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் முன்னமேயே 25 ஆயிரத்துகுக்ம் மேற்பட்டோர் துருக்கிக்கான தங்களது சுற்றுலாவை கேன்சல் செய்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில்,  துருக்கிக்கு எதிராக நாடு முழுவதும் வேகமெடுத்துள்ளது #BoycottTurkey எனும் கோரிக்கை. அந்நாட்டில் இருந்து வந்த ஆப்பிளை திருப்பி அனுப்பி வருகிறார்கள், இந்திய வியாபாரிகள். துருக்கி ஆப்பிளுக்கு குட்பை சொன்னது மும்பை! 

துருக்கியின் துரோகச் செயலைக் கண்டித்து, மும்பை பழ வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர். துருக்கி ஆப்பிள்களுக்கு பதில் இமாச்சல பிரதேசத்தில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் ஆப்பிள்களை வாங்குவோம். இதனால் 1,200 முதல் 1,500 கோடி ரூபாய் வரை துருக்கிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படும் என மும்பை பழ வியாபாரிகள் கூறினர். 

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

ஒரு புறம் சுற்றுலா, இன்னொரு புறம் பொருள்கள் புறக்கணிப்பு என இப்போது துருக்கிக்கு எதிராக இந்தியர்களின் மனநிளை மாறியுள்ளது. 

#Turkey #apple

Related articles

Recent articles

spot_img