ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றதால் பதினெட்டு வருடமாக அவர் வகித்துவந்த நாட்டின் தலைவர் பதவி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனது பதவியேற்பு விழாவானது 2012-ல் நடந்ததைவிட சாதரணமானதாகவே இருக்கும் என்றும், தனது தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட தன்னார்வலர்களை மட்டுமே விளாடிமிர் புதின் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமையன்று மாஸ்கோ மற்றும் மற்ற ரஷ்ய நகரங்களில் புதின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுடன் வன்முறை தடுப்பு ரஷ்ய காவல்துறையினர் மோதினர். ரஷ்யா முழுவதும் 19 நகரில் நடந்த கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட பாதிபேர் மாஸ்கோவில் போராடி கைதுக்குள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.