
REUTERS/Niranjan Shrestha/Pool (NEPAL – Tags: POLITICS) – RTR4FUCN
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் ரூ. 75 கோடி அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது தொடர்பான வழக்கில் இந்த பரபரப்பு தீர்ப்பை பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று வழங்கியது. 10 ஆண்டு சிறை ரூ. 75 கோடி அபராதம் இதுதான் தண்டனை.
மேலும், நவாஸ் ஊழல் பணத்தில் லண்டனில் கட்டிய அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை கைப்பற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியமுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.18 கோடி அபராதம் என தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



