இலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா சுட்டுக் கொல்லப்பட்டார். இவருக்கு வயது 40.
இந்த சம்பவம் குறித்து பேசிய போலீஸ் செய்தி தொடர்பாளர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சமபவம் நடந்த போது, கிருஷ்ணா, தலைநகர் கொழும்பில், செட்டியார் தெருவில் உள்ள கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 7.45 அளவில் நடந்துள்ளது.
நவோதய மக்கள் முன்னணி தலைவர், கிருஷ்ணா, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.



