ஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்

Published:

01 Aug12 elephant day 02 - 2026

உலக யானைகள் நாள் ( World Elephant Day ) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

01 Aug12 elephant day - 2026

உலகில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகள் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்க, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படுகிறது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

01 Aug12 elephant day 01 - 2026
உலகில் இதுவரை 22 வகை யானை இனங்கள் அழிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளன. தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய யானைகள் 55,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகள் உள்ளதாக கடந்த ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன. பிற்கால சந்ததிகள், யானைகளைப் பார்க்க, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படுகிறது.

தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

தந்தத்தை யானையின் கொம்பு என நடைமுறையில் அழைக்கின்றனர். ஆனால், யானையின் மேல்வரிசை பற்களின் நீட்சிதான் தந்தம். ஒரு டன் எடையுள்ள பொருளையும், தந்தத்தால் தூக்க முடியும். அதனால், சண்டையின் போது யானை தந்தத்தைத் தான் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும். தந்தம் இல்லாத ஆண் யானை, மக்னா யானை என அழைக்கப்படுகிறது. தும்பிக்கை மூலம் யானை வாசனை உணர்வு களை அறிந்து கொள்கிறது. 1.5 கி.மீக்கு அப்பால் உள்ள மனிதனின் நடமாட்டத்தைகூட யானையால் அறிந்துகொள்ள முடியும். யானைக்கு கேட்கும் சக்தி அதிகம். ஆனால், கண் பார்வை குறைவு. மூளையின் அளவு பெரியது என்பதால் யானைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு. இந்த நினைவாற்றல் மூலமே யானைகள், பரந்த காட் டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 100, 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன. நம் நாட்டில், காடுகளில் யானைகளே சாலைகள் உருவாகக் காரணம்.

உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.

Related articles

Recent articles

spot_img