பின்வாசல் வழியே வந்தார்… பின்வாசல் வழியே பறந்தோடினார்… அதுதான் ராஜபட்ச…!

பின் வாசல் வழியாக பதவிக்கு வந்த மகிந்த ராஜபட்ச, பின்வாசல் வழி நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடிய காட்சி என ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ராஜபட்ச நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடிய காட்சியை பலரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தங்களுடைய பெரும்பான்மையை காட்ட இயலாததால் பிரச்னையைக் கிளப்பிய ராஜபட்ச தலைமையில் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த சிறப்பு அமர்வை பார்வையிடச் சென்ற போது தான் எடுத்த புகைப்படமொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Teplitz தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.