வெள்ளை நிறத்தில் பால் சுவையோடு ஓடிய ஆறு!

உலகம் சற்றுமுன்
milk
milk

இங்கிலாந்தில் டுலைஸ் என்ற ஆற்றுப்பகுதியில் டேங்கர் லாரி பால் ஏற்றி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கிழக்கு வேலஸ் நகரில் கார்மர்தென்ச்ரிங் என்ற பகுதியில் டுலைஸ் என்ற ஆறு ஓடுகிறது. அந்தப் பகுதியில் பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சாலையை கடந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பால் அனைத்தும் ஆற்றில் கலந்ததுவிட்டது .

ஆகையால் ஆறு முழுவதும் வெள்ளை நிறமாக மாறி பாலாறாக காட்சியளித்தது. மேலும் விபத்துக்குள்ளான லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

அதன் பின்பு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆற்றிலிருந்து டேங்கர் லாரியை மீட்டெடுத்துள்ளனர். ஆறு வெள்ளை நிறமாக மாறியதை பார்த்து மக்கள் அதனை சுவைத்துப் பார்த்து பால் என்று உணர்ந்தவுடன் ஆச்சரியமடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.