புல்வாமோ தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியாவின் தீர்மானம் நிறைவேற்றம்!

உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

united nations - 2026
புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதை அடுத்து இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.

காஷ்மீர் புல்மாவோ தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்தத் தற்கொலைப் படை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களை தண்டிக்கவும் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில், இந்தத் தீர்மானத்துக்கு பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்தன!

இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பு குறித்த இந்தியாவின் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது.

இதில், ஜெய்ஷ் இ முகம்மது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்தன. இதை அடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, தில்லியில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதை அடுத்து, இதற்கு உரிய விளக்கம் தரவும், தடை விதித்தும் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.