இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல்: ஜெர்மனியில் மோடி

gandhi-statue-modi இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘சிட்டி ஹால்’லில் மோடி தேசப்பிதா மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்து பேசினார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரதமர் மோடியை கவுரவித்து, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இரவு விருந்து அளித்தார். இதில் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனும், இந்திய உயர் மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டினரின் முதலீடுகளை கவரவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் பங்கேற்கச்செய்யவும் 3 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக கடந்த 9-ந் தேதி பிரான்ஸ் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த நாட்டுடன் ராணுவம், சிவில் அணுசக்தி, விண்வெளி, ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் 20 உடன்பாடுகள் ஏற்பட்டன. பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, இரண்டாவது கட்ட பயணமாக பிரதமர் மோடி நேற்று ஜெர்மனி சென்றார். அங்குள்ள ஹனோவர் லாங்கன்ஹேகன் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 11.25 மணிக்கு (இந்திய நேரப்படி பகல் 3.30 மணி) ஏர் இந்தியா விமானத்தில் போய் இறங்கினார். அங்கு அவருக்கு இந்தியாவுக்கான ஜெர்மனியின் தூதர் மைக்கேல் ஸ்டெயின், ஜெர்மனிக்கான இந்தியாவின் தூதர் விஜய் கோகலே, துணைத் தூதர் விது நாயர் மற்றும் உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் மோடி நேராக காரில் மரிடிம் கிராண்ட் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் செல்லும் வழியெங்கும் ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) என்று எழுதப்பட்ட போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பிரதமர் மோடியை வரவேற்க ஓட்டலுக்கு வெளியே ஏராளமான ஜெர்மனி வாழ் இந்தியர்கள், மூவர்ணக்கொடியுடனும், வரவேற்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளுடனும் குவிந்திருந்தனர். அவர்கள் மோடியைப் பார்த்ததும் ‘மோடி… மோடி… என்றும், பாரத் மாதா கி ஜே’ (பாரத மாதா நீடூழி வாழ்க) என்றும் முழக்கமிட்டனர். மோடி அங்கு சில விநாடிகள் நின்று, இந்தியர்களின் உற்சாக வரவேற்பை புன்னகை தவழ ஏற்றுக்கொண்டார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லுடன் இணைந்து, ஹனோவரில் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகக் கண்காட்சியை மோடி தொடக்கி வைத்தார். அதில், மோடி பேசியபோது… அடிக்கடி விதிகள் மாற்றமடையாத, நிலையான சூழலை இந்தியாவில் ஏற்படுத்தி வருகிறோம். முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் வெளிப்படையான சூழலை உருவாக்கியுள்ளோம். “இந்தியாவில் தயாரிப்போம்’ என்பது கோஷமோ அல்லது குறியீடோ அல்ல. அது புதிய தேசிய இயக்கமாகும். ஜெர்மனி எங்களின் மதிக்கத்தக்க கூட்டாளியாகும். ஆழமாகவும், விரிவாகவும் வளரக்கூடிய நெருக்கமான உறவை இரு நாடுகளும் கொண்டுள்ளன. இந்தியாவுடனான வர்த்தகம், முதலீட்டு ரீதியான உறவுகளை மேம்படுத்த உலக நாடுகளிடையே புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகத்தையும் வரவேற்க இந்தியா தயாராக உள்ளது. நட்புறவுச் செய்தியும், ஒத்துழைப்பு உறுதியும் கொண்ட புதிய இந்தியாவின் சின்னமாக “இந்தியாவில் தயாரிப்போம்’ குறியீட்டில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் திகழ்கின்றன என்றார் மோடி. மோடியை வரவேற்று மெர்கெல் பேசுகையில், “இந்தியாவுடனான உறவில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்த ஜெர்மனி தயாராக உள்ளது’ என்றார். முன்னதாக, ஜெர்மனியின் ஹனோவர் விமான நிலையத்தில் மோடியை அந்நாட்டு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர், ஹனோவர் நகரில், ஜெர்மனியின் 20 முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவில் எளிமையான முறையில் தொழில் செய்வதற்காக, மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார். பின்னர், அவர்களை தனித்தனியாகவும் மோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடனிருந்தார். முன்னதாக, பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி முடித்துக் கொள்வதற்கு முன்பாக, மாணவர்களுக்கு சலுகை அளிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. இதன்படி, பிரான்ஸில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்களது படிப்பு முடிந்த பிறகும் 24 மாதங்களுக்கு அந்நாட்டில் தங்கியிருக்கலாம். இந்தியாவில் தங்கிப் படிக்கும் பிரான்ஸ் மாணவர்களும் இதேபோன்ற சலுகையை நம் நாட்டில் பெறலாம். ஜெர்மனியில் முதல் நிகழ்ச்சியாக அவர் அந்த நாட்டைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்து பேசினார். இதில் மத்திய தொழில், வர்த்தகத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் மற்றும் இந்திய உயர் மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை பற்றி எடுத்துக்கூறினார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதை விளக்கினார். இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.