வாட்ஸ்அப்-ஐ உடனே அப்டேட் செய்யுங்க… இல்லைன்னா ஆபத்து! எச்சரிக்கும் நிறுவனம்!

உலகம் சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

whatsapp fingerprint - 2026

வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறீர்களா உடனே அப்டேட் செய்யுங்கள் – இல்லையேல் ஆபத்து என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்சாப் பயன்படுத்தும் பயனாளிகள் தங்களது வாட்சாப் செயலியை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வாட்சாப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

அப்டேட் செய்யப்படாத செயலிகளில் ஹேக்கர்கள் புகுந்துவிட வாய்ப்பு இருப்பதால் அந்நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

வாட்சப்பில் உள்ள சில குறைபாடுகளை பயன்படுத்தி வாட்சப் பயன்படுத்தப் பட்டு வரும் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் சில ஹேக்கர்கள் அவர்களது சாப்ட்வேர்களை நிறுவ முயன்றுள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்சாப்பின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் குறி வைத்து, ஹேக்கிங்கில் கில்லாடிகளான சில ஹேக்கர்கள் இந்த வேலையை செய்துள்ளனர்.

இதைக் கண்டுபிடித்த வாட்சப் நிறுவனம் தங்களது பிற வாடிக்கையாளர்களை காப்பாற்ற உடனடியாக புதிய வாட்சப் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டில் ஹேக்கர்கள் ஊடுருவ முடியாத வகையில் சில வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன.

இதனை அடுத்து வாட்சப் செயலியின் புதிய பதிப்பை வாடிக்கையாளர்கள் உடனடியாக அப்டேட் செய்யுமாறு வாட்சப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. வாட்சப் நிறுவனத்திற்கு 1.5 பில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.