70 வயது புதுமாப்பள்ளையிடம் ரூ.70 ஆயிரம் மற்றும் நகை மோசடி; இரண்டாவது மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு…!

உலகம் கிரைம் நியூஸ்

theruttu 1 - 2026

70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் கணவரை துாங்க விட்டு நகைகளை திருடிக்கொண்டு தப்பியோட்டம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா மாவட்டத்தை சேர்ந்த முகமது முஸ்தபா.வயது 70 இவருக்கும் நஜ்மா பிபி 28 வயது என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

முஸ்தபாவுக்கு ஏற்கனவே முதல் திருமணம் நடந்துள்ளது. இது இரண்டாம் திருமணம் என்ற நிலையில், நஜ்மா பிபிக்கு ரூ.70000 பணம் மற்றும் முதல் மனைவியின் நகைகளை அவர் அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில், முதலிரவில் நஜ்மா பிபி தனது கணவர் முஸ்தபாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். புது மனைவியடம் பால் வாங்கி குடித்துவிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

பின்னர் காலையில் முஸ்தபா எழுந்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடி கொண்டு நஜ்மா பிபி ஓட்டம் பிடித்ததை முஸ்தபா உணர்ந்தார்.

இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ள முஸ்தபா, நஜ்மா பிபி ஒரு கும்பலுடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டார்.

இது குறித்து விசாரித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.