அழிவின் விளிம்பில் ஆனைமுகன் ஆலயம்!: திட்டமிட்டு தகர்க்கப்படும் ஹிந்து அடையாளங்கள்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

srilanka vinayakar temple - 2026

தற்சமயம் அழிவின் விளிம்பில் இருக்கும் விநாயகர் கோவில், கன்னியா.

இலங்கை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக உடைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.