indira gandhi rahul - 2026பரம்பரை ஆட்சி… இதற்காகத்தான் ஒழிய வேண்டும்! என்ற கருத்துகளுடன் ஒரு பழைய புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் டிவிட்டர் பதிவுகளில்.

1970களில்… மேற்கு வங்க முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர ரே, அப்போது தனது பாட்டி இந்திராவுடன் அமர்ந்திருந்த சிறுவன் ராகுல் காந்திக்கு வணக்கம் வைக்கும் போட்டோவைப் பகிர்ந்து, இதற்காகத்தான் பரம்பரை குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும் என்று கருத்து பகிர்ந்துள்ளனர்.

congress namaste - 2026

அதற்கு பதில் அளிக்கும் வகையில், தற்போது, பிரியங்கா ராபர்ட் வதேராவின் குழந்தைக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வைத்த வணக்கத்தை பதிலாகப் போட்டு… இந்தப் புகைப்படத்தையும் பத்திரமாக எடுத்து வையுங்கள். இதுவும் ஒரு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இதே போன்று பதிவிட தேவைப்படலாம் என்று கருத்துப் பதிவுகளைச் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending