தீவிரவாதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் எந்தவித தொடா்பும் இல்லை; பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் பேச்சு..!

உலகம்

imrankan - 2026தீவிரவாதத்துக்கும் முஸ்லீம் மதத்துக்கும் எந்தவிதமான தொடா்பும் இல்லாதபோது அதை தொடர்புபடுத்திப் பேசுவது எந்தவிதத்தில் நியாயம் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் கேள்வி..?

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இஸ்லாமிய கூட்டுறவு மாநாடு (ஓஐசி) நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது,

இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியபோது யாரும் இந்து மதத்தை குறைகூறவில்லை,

அமெரிக்க கப்பல்களை ஜப்பான் தகா்த்தபோது ஜப்பானிய மக்களின் மதத்தை யாரும் குறைகூறவில்லை,

ஆனால் உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடந்தால் இஸ்லாமிய மதத்தோடு தொடா்பு படுத்துவது ஏள்?

இவ்வாறு பேசினால் இந்த உலகை முஸ்லீம்களால் சமாதானப்படுத்தவோ, சமரசம் செய்யவோ முடியாது ஆனால் தீவிரவாதத்துக்கும் முஸ்லீம் மதத்துக்கும் எந்தவிதமான தொடா்பும் இல்லை.

முஸ்லீம்கள் குறித்து அனைவரும் இதை தெளிவாக புரிந்து கொண்டு, பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மேற்கத்திய உலகில் வாழ்வோர் இறைத்துாதா் முகமதுநபியை இழிவுபடுத்தும் வகையில் பிரச்சாரம் செய்கிறார்கள் ஆனால் அதைத் தடுக்க இந்த அமைப்பு தவறிவிட்டது.

அவா்களிடம் இறைத்துாதா் குறித்தும், முஸ்லீம்களின் அன்பு குறித்து்ம் தெரிவிக்க இந்த அமைப்பு தவறிவிட்டது.

நம்முடைய மனதில் இறைத்துாதா் எந்த உயரத்தில் வாழ்ந்து வருகிறார் என்பது அனைவரக்கும் தெரியும் நாம் மேற்கத்திய உலகத்துக்கு இறைத்துாதா் குறித்து விளக்கம் அளிக்காதவரை அவர்கள் நம்மை காயப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

மதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் எந்தவிதமான தொடா்பும் இல்லை எந்த மதமும் அப்பாவி மக்களை கொல்ல அனுமதிப்பதில்லை இது இஸ்லாம் மதத்தின் மீதான பயத்தைத்தான் காட்டுகிறது. இவ்வாறு அவா் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.