தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை தடை செய்க: நீதிமன்றத்தில் புகார் பதிவு!

Published:

IMG 20190617 WA0001 - 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருவர் புகார் பதிவு செய்துள்ளார்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்

இந்திய அணியுடனான படுதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மீது கடும் கோபத்திலும் விரக்தியிலும் இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா சிவில் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் பெருமளவில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் இந்தியாவுடனான 89 ரன் பெரும் தோல்விக்குப் பிறகு விமர்சனங்கள் அதிகரித்துள்ளன

பாகிஸ்தான் அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்ததால் கோபம் அடைந்துள்ளனர் பாகிஸ்தான் ரசிகர்கள்! குறிப்பாக ஆப்கானிஸ்தானை அடுத்து பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் மேலும் கோபமும் விரக்தியும் அதிகரித்துள்ளது

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

புகார் கொடுத்த ரசிகரின் பெயர் வெளியிடப்படவில்லை ஆனால் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் மேலும் மூத்த அணி தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட வேண்டும் என்றும் சமாம் என்ற செய்தி சேனலில் நேற்று தகவல் வெளியானது

இந்த நபரின் புகார் மனுவை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள  குஜ்ரன்வாலா நீதிமன்றம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img