40 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தும் அதிசயமாக சேதம் ஏதும் ஏற்படாமல் பிழைத்து, ஒரு அதிசய விடியோவையும் பதிவு செய்துள்ளது ஐபோன் ஒன்று. துபையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கேத்தலின் மரின். அவர் அண்மையில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் 40 ஆவது மாடியில் இருந்து மேக மூட்டங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கை விரல்களின் நடுவி இருந்து, அவரது ஐபோன் தவறிக் கீழே விழுந்தது. சுமார் 500 அடி உயரம் என்பதால், அந்த ஐபோன் வேகமாகக் கீழே நோக்கிச் சென்று தரையில் மோதி உடைந்து சுக்குநூறாகச் சிதைந்து போயிருக்கும் என்று மிகவும் வருத்தப் பட்டார் கேத்தலின் மரின். இருந்தபோதும், சிதறிய துகள்களையாவது சேர்த்து வைப்போமே என்ற எண்ணத்தில், கீழே சென்று அதனை எடுத்துப் பார்த்தார். அப்போது, ஆச்சரியப் படும் விதத்தில், அந்த ஐபோன் ஒன்றும் ஆகாமல் அப்படியே கிடந்துள்ளது. ஒருவாறு அதனை மீண்டும் இயக்கி, அவர் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படங்களுடன் சேர்த்துப் பார்த்த போது, 40 மாடிகளில் கீழே விழும் விடியோ காட்சி அதில் பதிவாகியிருந்ததாம். இது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விடியோவில், வது மாடியில் இருந்து நழுவிக் கீழே விழுந்தாலும், காற்றில் பயணித்து 40 மாடிகளையும் பார்த்துவிடுவது என்ற முடிவில் என் போன் ஒரு பயணம் வந்தது. ஆனால், அதில் ஒரு கீறல் கூட இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
40வது மாடியில் இருந்து விழுந்தும் தப்பிப் பிழைத்த அதிசயம்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari