December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

இந்தியா எச்சரித்தும் கோட்டைவிட்ட இலங்கை! நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் குறித்து முன்னரே உளவு!

Srilankabombblast - 2025

நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் – குண்டுவெடிப்புக்கு திட்டமிடுவதாக, கடந்த ஏப். 11ம் தேதியே இலங்கை கொழும்பு காவல் துறை தலைமைக்கு இந்திய உளவு அமைப்பு எச்சரிக்கை செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் பண்டிகை நடக்கும் நேரத்தில், இலங்கையில் சர்ச்சுகள் குறிவைத்து தாக்கப் பட்டுள்ளன. இலங்கை கொழும்பு நகரின் 3 முக்கிய சர்ச்சுகள் மீது குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன.

இலங்கையில் இன்று காலை 8.45க்கு மேல் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அங்கிருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள சர்ச்சுகள் மேலும் தாக்குதலுக்கு இலக்கு ஆகாமல் தடுக்க, ஆயுதம் தாங்கிய போலீஸார் பல்வேறு முக்கிய சர்ச்சுகளுக்கும் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர். போலீஸாருடன் ராணுவமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்த நிலையில், ஏழாவது குண்டு வெடிப்பும் ஏற்பட்டதால், இலங்கை கொழும்புவில் பீதி ஏற்பட்டுள்ளது.

srilanka blast1 - 2025குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடங்களில் போலீஸாருடன், சிறப்பு அதிரடிப் படையினரும் மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகை தினத்தை முன்னிட்டு, சர்ச்சுகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளன. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் சர்ச்சிலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய சர்ச்சிலும் இரு பெரும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த குண்டு வெடிப்பு களில்தான் பலர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த 500க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

srilanka churcharmy - 2025இதனிடையே, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டவர்களுக்கு ரத்தம் அதிகம் தேவைப்படுவதால், ரத்ததானம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இலங்கையின் மட்டக்களப்பு, பொலன்னறுவை, திருகோணமலை, நீர்கொழும்பு மற்றும் நாரேன்பிட்டி ரத்த வங்கி மத்திய நிலையங்களுக்குச் சென்று, பொதுமக்கள் ரத்த தானம் செய்து இயன்ற வகையில் ஓர் உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளையும் நாளை மறுதினமும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனை அறிவித்துள்ளார்.

இதனிடையே, ஸ்ரீலங்கா போலீஸ் தலைமைக்கு இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து உளவு எச்சரிக்கைத் தகவல் கடந்த ஏப்.11ம் தேதி கொடுக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

bombblast srilanka church - 2025நாடு முழுதும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தகவல் அளிக்கப் பட்டுள்ளது. காவல் துறை தலைவர் புஜுத் ஜெயசுந்தரவுக்கு ஏப்.11ம் தேதி இந்த உளவுத் தகவல்கள் அளிக்கப் பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியான இலங்கை ஏஜென்சியின் செய்தியில், வெளிநாட்டு உளவு அமைப்பு, நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் நாட்டில் முக்கியமான சர்ச்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று உளவுத் தகவல்கள் கொடுத்தது. மேலும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்பது, ஸ்ரீலங்காவில் உள்ள அடிப்படைவாத இஸ்லாமிய குழு. இது கடந்த வருடம் புத்தர் சிலைகளை உடைத்து நொறுக்கிய போது, வெளிச்சத்துக்கு வந்தது.

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரித்தது என்றும், 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்த போதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்தது என்றும், இந்தியா எச்சரித்தும் இலங்கை காவல்துரை அதிகாரிகள் அந்தத் தகவல்களில் போதிய கவனம் கொடுக்காததால் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும்  கூறப் படுகிறது.

1 COMMENT

  1. இத்தனைக்குப் பின்பும் உலகம் இப்படியான வன்கொடுமைகளை ஊக்குவிப்போரின் அடித் தளத்தைத் தகர்க்க உரிய நடவடிக்கை எடுக்காவிடில் என்ன நடக்குமோ ?
    வானத்து அழகிகளுக்காக ஏங்க வைத்து வன்முறையை வளர் பருவத்திலிருந்தே கற்பிக்கும் பாடசாலைகளை அழித்தொழிக்காமல், அடிப்படையான காரணியை அழிக்காமல் நாடுகள் யாவும் , ச
    ( சீ னா யப்பான் இஸரேல் தவிர ) அவர்களுக்கு பணத்துக்காக முட்டுக் கொடுப்பது ஏனோ .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories