தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி … தொடங்கி வைத்தார் எடப்பாடி!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்
edappadi education tv - 2026

தமிழக அரசின் கல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சி இன்று தொடங்கப்பட்டது. ஒளிபரப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கல்வி ‘டிவி’யின் ஒளிபரப்பு இன்று தொடங்கப் பட்டதை அடுத்து, இன்று பிற்பகல் 3 மணி முதல் ஒரு மணி நேரம் வகுப்புகளை ரத்து செய்து விட்டு, மாணவர்களுக்கு டிவி.,யில் காட்சிகளைக் காண ஏற்பாடு செய்யுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

kalvitv - 2026

தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் கல்வித்துறை தொடர்பான நிகழ்ச்சிகளை அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ‘சேனல்’ தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது மாடியில், இதற்கான அலுவலகமும், படப்பிடிப்பு தளமும் அமைக்கப் பட்டுள்ளது!

இந்த ‘டிவி’யின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடக்கப் பட்டுள்ளது. சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் பங்கேற்றார்.

kalvi tv logo - 2026

முன்னதாக, இந்த கல்வி ‘டிவி’ துவக்கம் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்ததாவது…

கல்வி, ‘டிவி’ ஒளிபரப்பு இன்று துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், கல்வி, ‘டிவி’யில் இன்று பிற்பகல், 3:00 மணி முதல், 4:00 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த நேரத்தில், அனைத்து பள்ளிகளின் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியை பார்க்க செய்ய வேண்டும்.யூ – டியூப்பள்ளிகளில் உள்ள, ‘டிவி’க்களிலும், ‘டிவி’ இல்லாத பள்ளிகளில், எல்.சி.டி., புராஜக்டர் வழியாக, யூ – டியூப்பை பயன்படுத்தி ஒளிபரப்பு செய்ய வேண்டும். .. – என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.