ஐஐடியில் எம்.டெக்., படித்துவிட்டு… ரயில்வேயில் டிராக்மென் வேலையில்..! இளைஞர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
shrawankumar btech - 2026

மும்பை ஐஐடி.,யில் பிடெக்., எம்டெக்., படித்துவிட்டு, ரயில்வேலியில் குரூப் டி பிரிவில் பணியில் சேர்ந்து டிராக்மென் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர், தான் அவ்வாறு அரசுப் பணியில் சேர்ந்ததற்கான காரணத்தைச் சொன்னது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை அரசு வேலையின் மீதான வெறி அல்லது அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையின் அறிகுறி என்று ஊடகங்கள் சித்திரிக்கின்றன.

மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக் மற்றும் எம்.டெக் பட்டம் பெற்ற ஷ்ரவன்குமார், ரயில்வேயில் சேர வேலை பாதுகாப்புதான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

பொதுப்பணிகள் ஆய்வாளர் (பி.டபிள்யூ.ஐ) இன் கீழ் சந்திரபுரா பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளா ஷ்ரவன் குமார், சந்திரபுரா மற்றும் டெலோ பிரிவுக்கு இடையிலான பாதையை பராமரிப்பதை மேற்கொண்டு வருகிறார்!

ஷ்ரவன் குமாரின் பேச்சு, தன்பாத் ரயில்வே பிரிவின் பல மூத்த அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்ந்த தகுதி வாய்ந்த ஒரு மனிதர் “டி” பிரிவு வேலையில் சேருவார் என்று ஒருபோதும் அவர்கள் நினைத்ததில்லை!

பீகார் தலைநகரில் வசிக்கும் குமார், ஐ.ஐ.டி-மும்பையில் 2010 இல் ஒருங்கிணைந்த டூவல் டிகிரி படிப்பில் சேர்ந்தார், 2015 இல் பட்டம் பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே அவர் அரசாங்க வேலையையே விரும்பினாராம்.

குமார் எதிர்காலத்தில் அரசுத் துறையில் அதிகாரியாக வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவரது ஐ.ஐ.டி. நண்பர்கள் பலர் தனியார் பணிகளில் நல்ல சம்பளத்தில் உள்ளனர், ஆனால் அவர்கள் அது போல் ஷ்ரவன் குமாரையும் தேர்வு செய்ய ஊக்கமூட்டத் தவறி விட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.