உக்ரைனில் போர் விலகி, அமைதி திரும்ப வேண்டி தென்காசி அருகேயுள்ள தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
உக்ரைனில் போர் விலகிடவும், இந்திய மாணவர்கள் மற்றும் மக்கள் நலமுடன் நாடு திரும்பவும், போர் நிறுத்தம் ஏற்பட்டுு நாட்டு மக்கள் நிம்மதியுடன் வாழவேண்டி, தென்காசி மாவட்டம், தோரணமலை முருகன் கோயில் அடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் பங்கேற்ற, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஓதுவார் மூர்த்தி சங்கரசட்டநாதன் தேவாரம், திருப்பாவை பாடினார்.நாள் முழுவதும் மலை மேல் உள்ள முருகனுக்கு உக்ரைனில் போர்விலக கோரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.






